Welcome

Saturday, November 16, 2024

உணவு வாழை இலையில் பரிமாறுவதன் இரகசியம் என்ன..?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

உணவு வாழை இலையில் பரிமாறுவதன் இரகசியம் என்ன..?

வாழை இலை ஒரு நச்சு முறிப்பான், கிருமி நாசினி

உணவு இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதத்தில் நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை. அதனால்தான் இலை சாப்பாடு.

தீ காயம் பட்டவரை வாழையிலையில்தான் படுக்க வைப்பார்கள். பாம்பு கடித்துவிட்டாலும் உடனடி முதலுதவி சிகிச்சை வாழை இலை சாறுதான் பருக கொடுப்பார்கள். உடனே நச்சு முறிந்துவிடும்.

எந்த வித நச்சும் முறிக்க படவேண்டும் என்றுதான் நான்கு பேர் கூடும் இடங்களிலும், திருமண பந்தலிலும், கோயில் திருவிழாக்களிலும் வாழை மரத்தை முதலில் கட்டி வைத்தான் தமிழன்.

அதாவது நச்சு முறிப்பான் உடன் கைகெட்டும் தூரத்தில் இருக்கவேண்டும் என்றுதான் அவ்வாறு செய்தான்.

வாழை இலையில் தினமும் சாப்பிட்டுவந்தால் தோல் பளபளப்பாகும். மந்தம் இளைப்பு, வலிமை குறைவு போன்ற பாதிப்புகள் நீங்கி உடல் பலம் பெரும்.

வாழை இலையில் உள்ள பச்சை தன்மை (குளோரோபில்) பசியை தூண்டி உண்ட உணவை எளிதில் ஜீரணிக்க செய்வதுடன் வயிற்று புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. பித்ததையும் குறைக்கும் தன்மை உடையது.

பள்ளி கல்லூரி செல்லும் மாணவமாணவிகள் அலுவலகம் செல்பவர்கள் மதிய உணவை எடுத்து செல்ல வாழை இலையே மிகச்சிறந்தது உணவும் பழுதாகாமல் மாலை வரை அப்படியே இருக்கும்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment