ஆரோக்கியம் என்று
சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை…
திருநீறுக்கு திருமந்திரம்
முதல் ஒளவையார் வரை நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான விளக்கம் சொல்லிவிட்டார்கள், சொல்லாதது…
அதிகாலையில் நாம்
குளித்து முடித்த உடன் இறைவனை வேண்டி பசு சாணத்தில் பக்குவமாக பன்னீர் கலந்து செய்த
திருநீறு நெற்றி நிறைய பூசுவது வழக்கம்.
நாம் குளித்து
முடித்த பின்னர் தலையில் சரியாக துவட்டா விட்டாலோ அல்லது தலையில் நீர் இறங்கி விட்டாலோ…
தலை பாரமாக இருக்கும்
சிலருக்கு அதன் மூலம் சளி கூட பிடிக்கும்…
தினமும் குளித்து
முடித்த உடன் திருநீறு பூசுவதால் தலையில் இறங்கிய நீரை உறிஞ்சிவிடும்.
அதனால் தலைவலி
தலைபாரம் சளி தொந்திரவுகள் நமக்கு வராது. இருந்தாலும் சரியாகிவிடும்.
மூன்று விரல்களை
வைத்து நெற்றியின் இடது புறம் இருந்து வலது புறம் வரைக்கும் இழுத்து பூசும்போது…
நமது மூளைக்கு
செல்லும் செயல்நரம்புகள் தூண்டப்பட்டு சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
சரி அதை ஏன் இறைவன்
பெயரைச்சொல்லி செய்யவேண்டும்?
சஞ்சலப்படும் மனதை
ஒருநிலைப்படுத்தி மன இறுக்கத்தை குறைக்கவும் ஆரோக்கியத்திற்காகவுமே திருநீறு பூசுகிறோம்.
தெய்வத்தின் பெயரைச்சொல்லி
இலவசமாகவே நம் ஆரோக்கியம் காத்தார்கள் நம் முன்னோர்கள்.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான
மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment