Welcome

Sunday, November 17, 2024

ஆரத்தி எடுப்பது ஏன்? பழக்கமா? பண்பாடா? மூடநம்பிக்கையா?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

ஆரத்தி எடுப்பது ஏன்? பழக்கமா? பண்பாடா? மூடநம்பிக்கையா?

ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாள தட்டில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பாக மாறும். அதில் கற்பூரம் ஏற்றி சம்பந்த பட்டவரின் இடம் வலம் மூன்று சுற்று சுற்றி விடுவதையே ஆரத்தி என்கிறோம்.

இது ஏன் செய்யப்படுகிறது?

ஓவ்வொரு மனிதனை சுற்றியும் ஆரா என்ற சூட்சும பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் கிருமி தொற்று முதலியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்த பின்னர்தான் உடலில் புகுகிறது.

புதிதாக திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடிந்து வரும் இளம் தாய், நீண்ட தூரத்து ஆன்மீக பயணம் முடித்து வருபவர்கள், வெற்றி பெற்ற பின் வீடு திரும்புபவர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பழக்கம் தமிழர்களிடம் உண்டு.

இவர்கள்மேதான் பலரின் திருஷ்டி விழ வாய்ப்பிருக்கிறது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. ஆரத்தி எடுக்கப்படும் நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேர வரும் விஷ அணுக்களை அழித்து நம் நலனை பேணுவதோடு ம|ற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கப்படுகிறது,

வீட்டினுள் நுழையும் முன்னரே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் விஷ அணுக்களை அகற்றி தூய்மை படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டிற்குள் அழைத்து செல்வது தமிழர் பழக்கம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி



No comments:

Post a Comment