Welcome

Saturday, November 16, 2024

உருமாலை கட்டுவது ஏன் என்ற இரகசியம் தெரியுமா ?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

உருமாலை கட்டுவது ஏன் என்ற இரகசியம் தெரியுமா ?

அந்தஸ்துக்கல்ல… அழகுக்கல்ல…. ஆரோக்கியத்துக்குதான்…

தமிழர் மரபுகள் அனைத்தும் அறிவியல் பூர்வமான காரத்தோடுதான் ஏற்படுத்தப்பட்டது.

நமது மூளை தலையில் ஒரு திரவத்திற்குள் மிதந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் அனைத்து மூளை கோளாறுகளும் வர வாய்ப்பிருக்கிறது.

வெப்ப அயர்ச்சியால் மூளை சாவுகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதனால்தான் கோடை காலத்தில் உச்சி வெயிலில் வரும் வயதானவர்கள் திடீர் மரணம் அடைகிறார்கள்.

தலையின் கருப்பு நிறம் என்பது சூரியனின் வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உடையது என்று நாம் அனைவரும் அறிந்ததே.

அதனால் விரைவில் தலை சூடாவதும் நடக்க கூடியதே.

உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தியினால் ஆன தூண்டுகொண்டு கட்டப்படுவது.

இது சரியாக தலையில் உள்ள மூளை திரவம் உள்ள பகுதியை மூடிவிடும்.. வெள்ளை நிறம் என்பதால் சூரிய கதிர்களை திருப்பி அனுப்பிவிடும்.

தலைக்குள் இறங்கும் சிறு வெப்பமும் பல அடுக்கு சுற்றுக்களால் மூளைக்கு வெப்பம் செல்லாதவாறு தடுக்கப்படுகிறது.

இயற்கையான பருத்தியின் குளிர்ச்சி ஈரப்பதத்தை வேர்வையை உறிஞ்சிகொள்வதால் உடல் பாதிப்படைவதில்லை.

அதே போல குளிர்காலத்திலும் பனியில் இருந்தும்..இதே உருமாலை நம்மை காக்கிறது…

உருமாலை காதோடு சேர்த்துக்கட்டப்படுவதால் காதின் வழியாக செல்லும் குளிர்ச்சி பனி தடுக்கப்பட்டு நமக்கு கதகதப்பை கொடுக்கும்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment