Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us
கலைஞர்
வேற..?!!!! கருணாநிதி
வேற…?!!!!!
என்னய்யா இவன பிடிச்சிட்டு வந்திருக்க ?
சார், இவன் டாஸ்மாக் வேண்டாம்னு
போராட போயிருக்கான்.
அது அரசாங்க சொத்துல்ல அத
நாமதான பாதுகாக்கணும்,
கடமைய செய்ய நான் போனேன்
சார்,
அங்க இவன் என்ன பண்ணான்
தெரியுமா சார்?
என்ன பண்ணான்?
அங்க கலைஞர் வாழ்கன்னு கைதட்டுறான்,
கும்பிட்டுக்குறான் சார்
பின்ன அவனே கருணாநிதி ஒழிகன்னு
கல்லை எடுக்குறான்,
அப்புறமா
கல்லை கீழபோட்டுட்டு கலைஞர் வாழ்கன்னு சொல்றான்,
அப்புறமா கருணாநிதி ஒழிகன்னு கத்துறான் சார்,
நீங்களே கேளுங்க சார்
என்னய்யா இது
உண்மையா?
சார், நான் கலைஞர் அய்யா
அபிமானி
அவருக்கு
எதிரி இல்ல , ஆனா கருணாநிதி
சரியில்ல சார் ,
இத சொன்னத்தான் சார் பிரச்சினையாடுச்சி..
புரியுற மாதிரி
சொல்லுய்யா...
சார், கலைஞர் வேற கருணாநிதி
வேறசார்.
நிறைய கள்ளச்சாரயம் இருந்தது அரசுக்கும் பணமில்லை அதனால மதுகடை திறந்தா
மக்களும் குடிப்பாங்க அரசுக்கும் பணம் வரும்னு நினைச்சது
கலைஞர் அய்யா சார் ,
ஆனால் குடிபெருகி அது எல்லையில்லாம போய்
இன்னைக்கு மாகாணமே நாசமா போக
கருணாநிதி காரணம் சார்
கலைஞர்
நல்லவரு சார்
மாநில உரிமைக்கு பாடுபட்டாரு, கோட்டையில கொடி எல்லாம் ஏத்தின
தேசாபிமானிசார் அவரு,
இந்தியாதான்
முக்கியம்னு 15 வருஷம் சென்ட்ரல்ல இருந்தார்
சார், 2009ல இலங்கை பிரச்சினையில
தலையிடாம இருந்த தேசாபிமானி சார்,
இந்திய
கூட அவர் புள்ளைங்க ஸ்கூல்ல
படிச்சி கொடுத்தப்போ அமைதியா இருந்தாரு சார்
,
ரொம்ப நல்லவரு சார.. எனக்கு
பிடிக்கும் சார்
ஆனா இந்த கருணாநிதி இருந்தார்ல
சார்
அவரு சரியில்ல சார், சதா இந்தி
எதிர்ப்பு பிரிவினைவாதிகளுக்கு சப்போர்ட், இந்து துவேஷம்னு நிறைய
குழப்பம் சார்
அத வுடுசார்,
எங்க கட்சி ரீதியா எங்க
கட்சி சங்கரமடம் இல்லைன்னு கலைஞர் சொல்வார் சார்,
ஆனா கருணாநிதி அவர் குடும்பத்தமட்டும் கட்சியில
வைப்பாருசார்
அதான் சார் சொல்றேன் கலைஞர்
வேற, கருணாநிதி வேற சார்.
கலைஞர்
வாழ்க, அவருக்கு நான் எதிரி இல்லை,
ஆனா கருணாநிதி ஒழிக அவர் சரியில்ல
சார்,
இதைத்தான் நான் போராட்டத்துல சொன்னேன்
இவர் பிடிச்சிட்டாரு சார்
என்னய்யா
நீ அந்த கட்சிக்காரனா இல்லியா?
நான் அந்த கட்சிக்கு
90 வருஷ தொண்டன் சார்,
நான் பிறக்காம போன காலத்துக்கும் சேர்த்து
வரலாற படிச்சதுல
இப்ப
90 வயது திராவிட தொண்டன் நான்
ஒருத்தனேதான் சார், மோஸ்ட் சீனியர்
அங்க பெரியார்னு ஒருத்தர் இருந்தார் சார் அவர் நல்லவரு
சாதி ஒழிப்பாரு, வைக்கம் வர நடப்பாரு,
காங்கிரஸ ஒழிச்சி கட்ட துடிச்சாரு
ஆனா ஈ.வே ராமசாமிதான்சார்
சரியில்ல
அவரு கீழவெண்மணி முதுகுளத்தூர்னா வாயே திறக்கமாட்டாரு,
காமராஜரும்
காங்கிரஸும் வேணும்னு சொன்னாரு, வைக்கம் வரைக்கும் நடந்தவரு
வடக்கன்குளம் மாதிரி கிறிஸ்தவசாதி பிரச்சினைக்கு
போகவே மாட்டாரு
ஈ.வே. ரா வேற பெரியார்
வேற சார்…
அப்படி
அண்ணாதுரைன்னு ஒருத்தர் இருந்தார் சார்,
திராவிட நாடு கேட்டாரு
இந்துமதமே இல்லைன்னாரு கம்பரசம் எழுதினாரு பெரிய பெரிய பிரச்சினையெல்லாம்
பண்ணாரு சார்
ஆனா அறிஞர்அண்ணா அப்படின்னு ஒருத்தர் சார்,
திராவிடநாடு
வேண்டாம் தமிழ்நாடு மாகாணம் போதும் , கம்பரசம்
புஸ்தமெல்லாம் வெளியிடமாட்டோம், ஒரே குலம் ஒரே
கடவுள் உண்டுன்னு திருமூலரெல்லாம் பேசினார் சார்
அறிஞர் அண்ணா
வேற அண்ணாதுரை
வேற சார்…
சார் அதான்சார் நான் விளக்கி சொன்னேன்,
இந்த கலைஞர் வேற கருணாநிதி
வேற,
திராவிடம்
வேற தமிழியம் வேற,
அறிஞர் அண்ணா
வேற அண்ணாதுரை வேற,
பெரியார்
வேற ஈரோட்டு ராம்சாமி வேற
சார்
என்ன தைரியம் இருந்தா இப்படி
குழப்புவ
உன்ன எங்க அனுப்புறேன் பாரு,
அங்க தான்
உனக்கு சரியாகும்..
அப்படியா
சார்,
அஙக இந்த சனாதனதர்மம்
வேற இந்துமதம் வேற,
சனாதானத்தை
எதிர்க்கிறோம் இந்துமதத்தை ஆதரிக்கிறோம்,
இந்து வேற
தமிழன் வேற,
காசி விஸ்வநாதன் வேற கபாலிஸ்வரரும் தஞ்சாவூர்
சிவனெல்லாம் வேற
உஜ்ஜைனி
காளி வேற தில்லை காளி
வேற,
கோலாப்பூர்
மஹாலட்சுமி வேற நம்ம தமிழ்காலண்டர்
லட்சுமி வேற
இப்படில்லாம்
பெரிய பெரிய ஆராய்ச்சி பண்றவங்க
இருப்பாங்களா சார்
அங்க விபூதி வேற இங்க
திருநீறு வேற,
அங்க திலகம் வேற இங்கு
குங்குமம் வேற,
அங்க உள்ள கிருஷ்ணன் சமஸ்கிருத
கிருஷ்ணன் இங்க இவன் கண்னன்
அப்படியெல்லாம்
சிந்திச்சி எழுதுற அறிவாளிகள் இருப்பாங்களா
சார்
மதுரா கிருஷ்ணன் வேற திருவரங்கநாதன் வேற
அப்படில்லாம்
சொல்றவங்க இருப்பாங்களா சார்,
புத்தனே
4 வேதமும் எழுதினான், புத்தனே இந்துமதத்தை தோற்றுவித்தான்
வியாசர் அவன்கிட்ட் இருந்து வேதத்தை பிடுங்கிட்டு
அவன மொட்டை அடிச்சி விரட்டுனாருன்னு
சொல்ற பெரிய ஆய்வாளரெல்லாம் இருப்பாங்களா
சார்..
சார்...ப்ளீஸ் சார்
அப்படியே
இந்தி படிக்கலாம் ஆனா திணிப்பு கூடாது,
பார்ப்பான்
எங்களுக்கு வக்கீலா வேணும் , ஆலோசகரா
வேணும், டாக்டரா ஆடிட்டரா வேணும்
ஆனா கோவில் பூசாரியாமட்டும் வேண்டாம்
பார்ப்பான்
வேற, பிராமணன் வேற,
பார்பானியம்
வேற ஆரியம் வேறன்னு சொல்றவங்கெல்லாம்
இருப்பாங்களா சார்
வடக்க தீவாளி வேற, இங்க
தீபாவளி வேற.
அங்க கோகுலாஷ்டமி வேற இங்க கிருஷ்ண
ஜெயந்தி வேற.
அயோத்தி
குழந்தை ராமன் வேற ராமேஸ்வர சீதாராமன்
வேற,
வால்மீகி
எழுதுன அயோத்தி ராமன் வேற
கம்பன் எழுதுன கோதண்ட ராமன்
வேற,
அப்படில்லாம்
சொல்ற பெரிய வித்வான்களெல்லாம் இருப்பாங்களா
சார்
பெரிய அறிவாளிங்க சார் அவங்க,
அவ்வளவும்
அறிவு சார் பொங்கி பொங்கி
வழியுதுசார்,
அப்படிபட்டவங்க
அங்க இருந்தா எனக்கு
படா தமாஷா இருக்கும் சார்,
நானும்
அறிவ வளர்த்து மாநில உரிமைக்கு
பகுத்தறிவோட
பாடுபடுவேன்ன் சார,
ப்ளீஸ்
சார்..."
திருட்டு திராவிட விடியல் நம்பர் ஒன் நாதாரி 200 ரோவா ஊப்பீஸ்.
வாக்குமூலம்.
--------------------------------------
விழிப்புணர்வுக்காக....
முரட்டு
சங்கி
சுந்தர்ஜி