Welcome

Wednesday, October 7, 2020

நலமோடு வாழ ஒரு


நலமோடு வாழ ஒரு #எதார்த்த_வாழ்க்கை..!!
#Sundarji
#suryatrust

சிந்திக்கவைக்கும்பதிவு..!!

●பணம் காசு மட்டும்
நிம்மதியான வாழ்க்கை இல்லை.

●விருப்பப்பட்டது கிடைக்கும் வரைதான்
வேகம் இருக்கும் எல்லோருக்கும்.

●வீட்டில் பிரிட்ஜ் இல்லாத அந்த கால நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன்.

இப்போது பிரிட்ஜ் இருக்கிறது.
ஆனால் ஐஸ் வாட்டர் மோகம்
எங்கே போயிற்று என்று தெரியவில்லை.

● டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று அன்றுஆசை பட்டேன்.
இப்போது வாங்கிய பிறகு பெரிய ஆர்வம் இல்லை.

அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி இருக்கிறது.

● சோஃபாவும் அப்படித்தான்!

● பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் !

● ஆசைப்பட்டு வாங்கிய costly மொபைல்
இப்போது ஏனோ பெரிதாக மனதை கவரவில்லை.

● ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி பெட்டி. 

ஆனால் இப்போதெல்லாம் அதிக நேரம் 
பார்ப்பது சலிப்பாக இருக்கிறது.

● Laptop ஆசை பட்டு பார்த்து பார்த்து வாங்கியது.இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது.
ஆனால் mostly businessதான்.

எல்லாம் இருந்தும் எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை.

பயன்படுத்துவதும் இல்லை..

● அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.

● எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது.

★ இது ஒரு Duplicate வாழ்க்கை 
என்று உணர முடிகிறது.
மனதோடு இயைந்த வாழ்வு அல்ல

★ வெளியூரில் Star Hotel ல் தங்கினாலும்
மனதளவில் பெரிய நிம்மதி இல்லை.
வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில் தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடும்.!

★ இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன. உணர்த்தவும் செய்தது.

★ நமக்கு பண வரவு, சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று அடிக்கடி சரி பார்த்துக்கொண்டாலும்,

★ ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ 
நமது பழைய மனதுக்குப்பிடித்த 
நெருக்கமான வாழ்வைத்தான்!

★ தெருவிலே சட்டென்று இறங்கி நாலு பேரிடம் பணம் மட்டும் வாழ்க்கை இல்லைங்கன்னு சொல்லத்தோணுது.

★ ஆயிரம் இருந்தும்....
வசதிகள் இருந்தும்....
Peace of Mind எங்கே என்று தேடினால்
ஒளிவு மறைவு கள்ளமில்லா மனம் விரும்பும் பழைய வாழ்வே.

★ நகரத்திலிருந்து நம் சொந்த கிராமத்திற்கு போனால்அங்கேயே இயற்கையோடு தங்கிவிடலாமா என்று தோன்றுகிறது.

★ செயற்கை வாழ்வெல்லாம் வேறு வழி இல்லாமல் பணம் காசுக்காக வாழ்வது.
அப்படியே வாழ்ந்து பழகியாச்சு. 

ஆனால் மனம் விரும்புவதென்னவோ கள்ளங்கபடமில்லாத  இயற்கையோடு இணைந்த வாழ்வையே.

எளிமையான வாழ்க்கை, நிறைவான மகிழ்ச்சி..

பகிருங்கள், எது எதார்த்தம் என புரிந்து கொள்ளட்டும்..!!


Tuesday, October 6, 2020

ஆயிரம் தாஜ்மஹாலை இன்று உருவாக்க முடியும்

 #சுந்தா்ஜீ

ஆயிரம் தாஜ்மஹாலை இன்று உருவாக்க முடியும்
ஆனால் ஆயிரம் எஞ்சினியர் சேர்ந்தாலும் இதில் ஒரு தூணைக்கூட உருவாக்க முடியாது



#சூா்யா

Thursday, October 1, 2020


Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us