Welcome

Monday, December 30, 2024

அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது எதற்காக?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது எதற்காக?

வெட்டி வேலையா? மூட நம்பிக்கையா?

நம் வீட்டு பெண்கள் ஒரே ஒரு கோலம் போடுவதால் எக்கசக்க நன்மை இருக்குன்னா உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை… வரிசையா சொல்றேன் கேட்டுக்கோங்க…

அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். காரணம் என்ன தெரியுமா? அந்த நேரத்தில் ஓசோன் படலம் கீழ் இறங்கி பூமியின் மேற்பரப்பில் தவழ்ந்திருக்கும்.

அந்த நேரத்தில் நாம் வெளியே வந்து அந்த காற்றை சுவாசித்தால் உற்சாகம் பிறக்கும் சுறுசுறுப்பு கிடைக்கும். (அதிகாலையில் பேப்பர் போடுபவர் பால் ஊற்றுபவர் உற்சாகத்துக்கு சுறுசுறுப்புக்கு காரணம் இதுதான்) மனது ஒருநிலையில் அமைதியாக நிர்மலமாக இருக்கும். அதனால்தான் மாணவ மாணவிகளை அதிகாலை எழுத்து படிக்கச்சொல்வது. ஒரு முறை படித்தாலே மனதில் பதிந்துவிடும் என்பதால்தான்.

அது மட்டுமில்லை பெண்கள் கோலம் போடும்போது குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் சிறந்த உடற்பயிற்சி யோகாசனம். (அதைவிட்டதால்தான் இன்று அதே பயிற்சியை காசு கொடுத்து கார்பரேட் கம்பெனி பிட்னஸ் செண்டர்/ யோகா கிளாஸ் போய் செய்கிறார்கள்)

அதுமட்டுமில்லை கோலம் போடுவது எந்திரம் எழுதுவது போல சிந்தனை ஒருநிலைப்பட்டு குடும்பத்தில் எப்பேர்பட்ட சிக்கல் ஏற்பட்டாலும் தீர்க்கும் திறனுக்கு பயிற்சியாக அமையும்.

அதுமட்டுமில்லை அந்த காலத்தில் கோலத்தை அரிசி மாவில்தான் போடுவார்கள். இது அணில், குருவிகள், எறும்புகளுக்கு உணவாக செல்லும் நல்ல தர்ம சிந்தனையை உருவாக்கும். புண்ணியம். 

அதுமட்டுமில்லை கோலம் போடுவதற்கு முன்னர் வாசலை சுத்தம் செய்து பசுமாட்டு சாணியால் தெளிப்பார்கள் இது பாக்டீரியாவையும் கதிர்வீச்சையும் தடுக்கவல்லது.

இப்படி நம் வீட்டு பெண்கள் தினம் ஒரு கோலம் போடுவதால் கிடைத்த நன்மை அத்தனையும் இழந்தது மட்டுமில்லை பெண்களை நோயாளியாக்கியதுதான் மிச்சம்.

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி 



குழந்தை இடைவிடாது அழுதால் திருஷ்டியா? வியாதியா? பயமா?


Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

குழந்தை இடைவிடாது அழுதால் திருஷ்டியா? வியாதியா? பயமா?

 

பொதுவாகவே இடைவிடாது பச்ச குழந்தை அழுதால் திருஷ்டி பட்டுவிட்டது என்று சொல்லி…

 

ஒரு ஈர் குச்சியில் மூன்று மிளகாய் வத்தல் சொருகி அதன் நுனியில் ஒரு வெள்ளை பருத்தி துணியை சுற்றி நல்லெண்ணையில் நனைத்து பற்ற வைத்து குழந்தையின் முன் இடம் வலமாக ஆட்டுவார்கள்.

 

எதையாவது பார்த்து பயந்தோ அல்லது கனவு கண்டோ அதை நினைவில் சொல்லதெரியாமல் அழுதுகொண்டே இருக்கும் குழந்தை இந்த புதிய ஒளியை கண்டு அதிசயத்து பார்க்கும்.

 

அதன் பார்வை அந்த ஒளியின் மீதே இருக்கும். அதன் ஆழ்மனதில் பதிந்த பய உணர்வு மெல்ல மெல்ல அகலும். அதன் மனதில் இந்த வெளிச்சம் மட்டுமே நினைவில் நிறையும்.

 

அத்தோடு மிளகாயும் எண்ணையும் கலந்த புகை நெடி குழந்தையின் சுவாசத்தை சீர் செய்யும். நெஞ்சில் கோழை சளி இருந்தால் இருமல் தும்மல் மூலம் வெளியேறும்.

 

சிறு குழந்தைகள் கண்ணால் சிவப்பு வெள்ளை நிறங்கள் மட்டுமே இனம் காணமுடியும். மற்ற நிறங்கள் தெரியாது. எனவேதான் இந்த ஏற்பாடு. 

 

வளர்ந்த குழந்தைகளுக்கு கண் கொட்டாங்கச்சியில் மிளகாய் கல் உப்பு போட்டு எரியவிட்டு சுற்றி போடுவார்கள்.

 

இதன் மூலம் கெட்ட நீர் வியர்வையாக வெளியேறும். இதன் நெடியில் சுவாசம் சீரடையும் சுவாச பாதையில் உள்ள சளி தும்மல் மூலம் வெளியேற்றவே இந்த ஏற்பாடு.

 

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

 

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

 

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது.

 

அதில் மூடநம்பிக்கை இல்லை.     

 

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

 

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

 

தமிழன் திமிரானவன்

 

சுந்தர்ஜி


Wednesday, December 25, 2024

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வாழ்க.. அப்படின்னா? என்ன?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வாழ்க.. அப்படின்னா? என்ன?

ஆலமரம் அடிமரம் இற்றுப்போனாலும் விழுதுகள் தாங்கிப்பிடிக்கும். அதுபோல விழுதாக குடும்பத்தை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்றே இந்த வாழ்த்து. ஆலமரம் காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்ஸிஜனை 20 மணி நேரம் வெளியிடும் தன்மை கொண்டது. அதுபோல தனக்கு இடர்வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும் என்ற பொருளிலும் இந்த வாழ்த்து.

அருகம்புல் ஒவ்வொரு கணுவிலும் வேர் பிடிக்கும் தன்மை கொண்டது. இடையே வெட்டுப்பட்டாலும் கணுவில் இருந்து துளிர்த்து தழைக்கும். அதுபோல எந்த இடர் வந்து சிதைத்தாலும் சிதையாமல் குடும்பத்தை காக்கும் குணம் வேண்டும் என்றே இந்த வாழ்த்தின் பொருள்.

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி