Welcome

Tuesday, November 17, 2020

கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்

#Sundarji
#Suryatrust

#கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...
#இந்து #கோவில்கள் பலவும் அதிசயங்களும் ஆச்சர்யங்களும், வரலாறுகளும் நிறைந்திருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. அப்படி நீங்கள் கொஞ்சமும் யோசித்துப் பார்க்காத மர்மம் நிறைந்த கோவிலான கேதரேஸ்வரர் குகை கோவில் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

#சிவன்கோவில்..

இந்து மத நம்பிக்கைகள், கடவுள்கள், புராணங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினால் தெரியும். அதற்குள் ஏராளமான அதிசயங்களும் மர்மமான் விஷயங்களும் புதைந்திருப்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு திருத்தலங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய பாரம்பரியமும் வரலாற்றுப் பின்புலமும் நிறைந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது. அதிலும் சிவன் கோவில்களை எடுத்துக் கொண்டோமானால், சிவனைப் போலவே மர்மங்களால் சூழ்ந்திருக்கும்.

#மர்மங்கள் சூழ்ந்த கோவில்..

ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் பின்னாலும் ஏதாவது #திருவிளையாடல்களும் வேறு சில காரணங்களும் இருக்கும். அவற்றில் நிறைய மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே தான் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான் ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில். இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த மர்மங்கள் நிறைந்த குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் இருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட அதிசயக் கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில். இந்த கோவில் மட்டுமல்ல. இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது.

🙏​கடும் குளிர்...

இந்த குகை மற்ற குகைகளைப் போல அல்ல. தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம் தான். குறிப்பாக மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.

🙏 ​நான்கு யுகங்கள்...

இந்த குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம்.

🙏சத்ய யுகம்
🙏த்ரேத யுகம்
🙏த்வாபர யுகம்
🙏கலியுகம்

🙏 ​எப்போது உலகம் அழியும்?...

சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத் தான் அந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும், ஒவ்வொரு தூணாக கீழே விழும் என்பது தான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்து விட்டனவாம். இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. 

அந்த நான்காம் தூண் தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். அந்த நான்காம் தூண் தான் இந்த பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம். இந்த தூண் விழும் நாள் தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம். அதாவது உலகம் அழியும் நாள்.

ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க வாழ்க 
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க வாழ்க 
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க வாழ்க

Thursday, November 5, 2020

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்...
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து #சிதம்பரம் #நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது #தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து #திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் #திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் 

இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே...

#Sundarji
#Arunagiri
#suryatrust

Monday, November 2, 2020

ஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி, இரும்பில் வெல்டிங் செய்யாமல்

ஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி, இரும்பில் வெல்டிங் செய்யாமல், ஒட்டு இல்லாமல், ஒரே கல்லாலான சங்கிலி! எப்படி செய்திருப்பார்கள்??
கற்பனை செய்யவே கடினமாக உள்ளது ஒரே கல்லில் இந்த சங்கிலி தொடர் செதுக்கப்பட்டுள்ளது. செய்யும் போது ஒன்று உடைந்திருந்தாலும் அவ்வளவும் வீண் தான். ஆனால் இதையும் மிக நேர்த்தியாக செதுக்கியுள்ள நம் #தமிழ் சிர்ப்பிகளின் தொழில்நுட்பம், #அறிவியல் கணக்கீடுகள் யாவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இதுபோன்ற சிற்ப நுட்பங்களை கற்றிருந்த சிற்ப்பிகள் மகத்தான அறிவியல் முன்னோடிகள். இது போன்ற ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வடிவங்களில், ஆயிரம் கால் மண்டபத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன இந்த சங்கிலிகள்! 

இடம் : #காஞ்சிபுரம்!
#சுந்தா்ஜி