Welcome

Monday, June 29, 2020

நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


#இயற்கை #மருத்துவம் #வழங்கும் அறிந்து கொள்வோம்




 #சிறுநீர்_கசிவு 


 🧕🧕🧕சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறுவர்🧕🧕🧕.  

இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதை பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.  

வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை.

மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி விடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள் தான் அதிகம். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால், இப்போது இந்நிலை மாறி விட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும்.

ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.

 உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது. ஸ்லிங் என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும்.  அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும். 

இது தவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும். குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும். 

 நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Friday, June 26, 2020

பெண்கள் ஏன் தாலி அணிகிறார்கள் என்பது தெரியுமா ?





#இந்துக்களில்_பெண்கள் ஏன் தாலி அணிகிறார்கள் என்பது தெரியுமா ?

இந்த தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல் இல்லாமல் ஒரு புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புனித நூல் இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தோற்றம் களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவை பொருத்த வரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும் வட இந்தியாவில் மாங்கல்சூத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் இதன் முக்கியத்துவமும் இதன் பொருளும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தாலி என்பது மரியாதை, அன்பு, காதல் மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும் பெண்ணும் இணையும் திருமண வாழ்க்கையில் பிரதிபலிக்கும் அடையாளமாக உள்ளது. இது இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் முக்கிய அடையாளமாகவும் கருதப்படுகிறது.

புராண கால வரலாற்று படி பார்த்தால் இந்த தாலி என்பது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சியப்ப சிவசாரியாரின் கந்த புராணத்தில் இது இடம் பெற்று உள்ளது. அதற்கு அடுத்த படி 12 ஆம் நூற்றாண்டில் கம்பர் மற்றும் சேக்கிழார் போன்ற வர்கள் பெரிய புராணத்தில் இதைப் பற்றி கூறியுள்ளனர். இதன் படி தான் தாலி என்பது இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
தாலியின் வடிவமைப்பு
பொதுவாக தாலி வெவ்வேறு வடிவமைப்பில் வடிவமைக்கப்படுகிறது. கடவுள் சிவபெருமானின் திருவுருவம் என்றால் 3 கிடைமட்ட கோடுகளை கொண்டும் கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் 3 செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் சாதி மத வேறுபாடுகளின் படி அவர்கள் தங்கள் திருமணத்தின் போது வெவ்வேறு விதமான தாலிகளை வடிவமைத்து கொள்கின்றனர்.
அறிவியல் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலு‌ம் பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும் படி அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

வட இந்தியாவில் இந்த தாலி என்பது கருப்பு மற்றும் தங்க மணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ் போன்று காணப்படும். இதில் உள்ள தங்க மணிகள் கடவுள் பார்வதி தேவியையும் கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்க மணிகள் செல்வத்தையும் சந்தோஷத்தையும் வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும் வளத்தையும் காக்கின்றனர்.
கருப்பு மணிகள் என்பவை கணவன் மனைவிக்கு இடையே உள்ள உணர்வுப் பூர்வமான பந்தத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் இந்த மாங்கல்சூத்திரா கண்திருஷ்டி போன்ற கெட்ட சக்திகளை ஒழிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது. மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காக்கிறது.
இந்த தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்துப் பெண்கள் மிகவும் பயப்படுவர். கடவுளை வேண்டி தன் கணவரை காக்க வேண்டும் என்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் வழிபாடு மேற்கொள்வர்.

ஆனால் தற்போதைய மாடர்ன் வாழ்க்கையில் தாலி என்ற புனித நூல் சடங்குகள் மறைந்து வருகிறது. பெண்கள் எப்போதாவது தாலிகளை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு போகும் போது அணிதல் போன்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாக திருமண பந்தத்தில் மாறி வருகிறது.

இருப்பினும் இந்த தாலி என்ற புனித நூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Monday, June 15, 2020

தானம் செய்ய

                                                          #Sundarji

                       #தானம் செய்ய *அறிவு விடாது!
                                               #தர்மம் செய்ய புக்தி விடாது!
                                  #அறிவும் - புக்தியும் விட்டாலும் சித்தம் விடாது!


Tamilan
இவைகளை ஜெய்த்துதான் பின்பு மனதையும் வெற்றியுடன் தாண்டினால் இறை சக்தி வேலை செய்து உங்களை தானம் தர்மம் கொடுக்க வைக்கும்! 
இத்தனைக்கு பிறகே உங்கள் பிராண உடலில் அதிர்வலை மாற்றங்கள் நடந்து கர்மா கழியும்! 

அனைத்தும் ஜெய்த்து இறை அருளை பெறுவீர்! அதை அடையவே உடலெடுத்து வந்தோம்!

Monday, June 1, 2020

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

#கடவுள்வாழ்த்து ...#ThePraiseofGod ...#KatavulVaazhththu


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


#SuryaTrust
#Ourdreams



#Sundarji


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


#Arunagiri